சாலையில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

சாலையில் விடப்படும் வளர்பு மாடுகளின் உரிமையாளர்கள் மீது விலங்குகள் கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், காவல்துறை கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை மற்றும் வடகரை பகுதியின் குமுளிதிண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தென்கரை மூன்றாந்தல், மார்கெட் பகுதி, தண்டுபாளையம், காந்தி சிலை மற்றும் ஊரின் மைய பகுதியான அரண்மனைத் தெரு, புதிய பஸ்நிலையம் போன்ற இடங்களில் தனியாருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.

மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்ததோடு சாலையில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைகளில் செல்லும் மாடுகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில்,

இன்று பெரியகுளம் நகராட்சி அலுவலத்தில் சாலையில் சுற்றி திரியவிட்டு மாடுகள் வளர்க்கும் மாடு உரிமயாளர்களை அழைத்து நகராட்சி ஆணையாளர், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  சாலையில் திரியும் மாடுகளுக்கு முறையான மாட்டு தீவனங்கள் போட்டு கட்டி வளர்காமல் சாலையில் விட்டு வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் மீது விலங்குகள் கொடுமைபடுத்தும் தடை சட்டத்தின் கீழ் காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சாலைகளில் திரியவிட்ட மாடு வளர்க்கும் மாட்டு உரிமையாளர்களுக்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு மாடுகளை சாலைகளில் விடாம வளர்க்க அறிவுருத்தப்பட்டது.

Translate »
error: Content is protected !!