சீரமைக்காத டிரான்ஸ்பார்மரால் மின்தடை! இரவில் மறியல் செய்த மக்களால் பரபரப்பு!!

பழுதான டிரான்ஸ்பாமை சீரமைக்காததால் கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரண்டு நாட்களாக நீடித்த மின் தடையை கண்டித்து பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 12 வார்டுகள் உள்ள பகுதி மற்றும் மேல்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிக்கும் மின் வினியோகம் செய்யப்படும் டிரான்ஸ்பாம் பழுதாகி உள்ளது.

நேற்று காலை முதல் அந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பழுதான டிரான்ஸ்பார்மை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தும் மீண்டும் மீண்டும் பழுதானது. இதனால் மின் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

அடுத்த நாள் மாலைக்குள் டிரான்ஸ்பார்மை சீரமைத்து மின் வினியோகம் செய்யப்படும் என்று மின் வாரியம் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக இரவில் மின் வினியோகம் சீராகவில்லை.

இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், டிரான்ஸ்பார்மை சீரமைத்து மின் வினியோகம் வழங்கக்கோரியும், வடுபட்டி, மேல்மங்களம் கிராம மக்கள் பெரியகுளம் – ஆண்டிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதயறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், சாலைமறியிலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்தில் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியில் போராட்டத்தை கைவிட்டனர்.

கிராம மக்கள் கூறுகையில் தங்களுக்கு பெரியகுளம் நகர் மின் வினியோகத்தில் இருந்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!