சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த வாரம் நடந்த ரவுடி நாய் ரமேஷ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த வாரம் நடந்த ரவுடி நாய் ரமேஷ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
சென்னை, புளியந்தோப்பு, டிம்மல்லஸ் சாலையைச் சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ்பாபு என்கிற நாய் ரமேஷ் (வயது 34). கடந்த 8ம் தேதி இரவு 9 மணியளவில் பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் மெயின் ரோடு, 5-வது தெரு அருகே நடந்து வந்த போது அங்கு வந்த 5 பேர் கும்பல், ரமேஷை வழிமறித்தது ஓடஓட விரட்டி வெட்டிச்சாய்த்தது. பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஐந்து பேர் கொடூரமாக ரமேஷை வெட்டுவதும், அதனைக் கண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அலறியடித்து ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜி என்கிற விஜயகுமார், கார்டன் சரத் என்கிற சரத் சூரியா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலையாளிகள்
ஹிஸ்டரி ஷீட் ரவுடியான ரமேஷ் 2016 ஆம் ஆண்டு புழல் காவங்கரை பகுதியில் தனது பரம எதிரியான சிவராஜை போட்டுத்தள்ளினார். அது உள்பட நாய் ரமேஷ் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிவராஜின் கொலைக்கு ரமேஷை பழிவாங்க சமயம் பார்த்த சிவராஜின் கூட்டாளிகள் 8ம் தேதி இரவு தங்கள் திட்டத்தை நிறைவேற்றி வெறியை தீர்த்துக் கொண்டனர்.
கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ்,.
சென்னையில் பெரும்பாலும் ரவுடிகள் ஒடுக்கப்பட்டாலும் சின்ன சின்ன ரவுடிகள் புதிது புதிதாக முளைத்து பணத்துக்கு ஆசைப்பட்டு கஞ்சா போதையில் கூலிப்படையில் இணைகின்றனர் என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன. புளியந்தோப்பு ரவுடி கொலையில் சென்னையில் கூலிப்படையினரின் நடமாட்டம் குறையவில்லை என்பதையே அந்த சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. ரவுடிகள் இது போன்ற பழிவாங்கும் படலத்தில் கத்திகளை வைத்து மக்களை பயமுறுத்துகின்றனர்.
ஒரு காலத்தில் தென்சென்னையை அயோத்திகுப்பம் வீரமணி, பங்க்குமார் ஆகியோரும் வடசென்னையை நாகேந்திரன், பாக்சர் வடிவேலு, சேரா, வெல்டிங்குமார், காட்டான் சுப்பிரமணியம் உள்ளிட்ட ரவுடிகளும் ஆட்டிப்படைத்தனர். இப்போது அவர்கள் காலாவதியாகி விட்டாலும் தற்போது அந்த இடத்தை காக்கா தோப்பு பாலாஜி, கல்வெட்டு ரவி உள்ளிட்டோர் பிடித்துள்ளனர். இவர்கள் சிறையில் இருந்தாலும், ஜாமினில் வெளிவந்தாலும் அவர்களது நடமாட்டத்தை காவல்துறையின் தனிப்பிரிவு கண்காணித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்காக வேலை செய்யும் கூலிப்படையினரின் நடமாட்டத்தையும் கண்காணித்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்னொரு பக்கம் வழிப்பறி சம்பவங்களில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் வலம் வந்து சாலைகளில் நடந்து செல்வோரிடம் கைவரிசை காட்டுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்