சென்னை,
சென்னையில் 2 இடங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1,375 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
சென்னை, அயனாவரம் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் பெருமளவு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது.
அதனையடுத்து அவற்றை லோடு வாகனத்தில் கடத்தி வந்த பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த செல்வராஜ் (58), பழனிச்சாமி (60), லட்சுமணபெருமாள் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 675 கிலோ குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள், மற்றும் 1 லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை, தாம்பரம் போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் நேற்று காலை 6 மணியளவில் முடிச்சூர் சர்வீஸ் சாலை சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக காரில் குட்கா கடத்தி வந்த மணிமங்கலத்தைச் சேர்ந்த மகேந்திரன் (எ) ராஜ் (38) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து பூந்தமல்லி பகுதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 700 கிலோ குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள், ரொக்கம் ரூ. 9.77 லட்சம்,- 1 கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நரேந்திரன் (எ) ராஜ் குட்கா புகையிலைப்பொருட்களை தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மகேந்திரன் (எ) ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் ஒரே நாளில் 2 இடங்களில் மொத்தம் 1375 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.