சென்னை நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

சென்னை நகரில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீஸ் தனிக்குழுவினர் அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சென்னை நகரில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் போக்குவரத்து போலீசாரால் 1,933 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டம் ஒழுங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,485 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 278 வழக்குகளும், அரசு அறிவித்த நேரத்தை மீறி கடையை திறந்தவர்கள் மீது 55 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!