செய்திச்சாரல்……

# முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, கோவிட்-19 நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

# SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது – விஜயகாந்த் அறிக்கை!

#எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வாய்:-எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல்!

# கொரோனா காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ளன.

# பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது – தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா -பீகார் தேர்தலில் வாக்களிக்க உள்ள 7 கோடி வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்

#அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையை வெளிப்படுத்துவர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்.

# பீகார் சட்டமன்றத் தேர்தலில் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும்.-வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.-வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம்

# புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 பழமையான சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

# பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15-லிருந்து ரூ.16.50-ஆக உயா்த்தப்படுகிறது.-இந்த விலை உயா்வு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

# ஏழை மக்கள் சமையலுக்கான எரி பொருளாகப் பயன் படுத்தும் மண்ணெண் ணைய் விலையை லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தியது கண்டனத்திற்குரியது-மு.க ஸ்டாலின்

வாங்கும் சக்தியை இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில் இரக்கமற்ற அதிமுக அரசு மேலும் சுமையை ஏற்றுவது ஏன்? விலை உயர்வை அரசே ஏற்க வேண்டும்!- மு.க ஸ்டாலின்

# புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

# ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன், திரைத்துறையில் பெண்கள் மட்டும் தான் போதை மருந்து பழக்கம் இருப்பவர்களா, ஆண்கள் கிடையாதா? இல்லையென்றால் பெண்களை மட்டும் தான் கேள்வி கேட்டு விசாரணை செய்து, சம்மன் அனுப்பி, அவதூறு பேசவேண்டும் என்பது விதியா. இந்த வழக்கம் எனக்குப் புரியவில்லை”-நடிகை குஷ்பூ

#வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி – விவசாயச் சங்கத்தினர்.

# திருவண்ணாமலை மாவட்டத்தில் நுகர்வோர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் 13 அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனங்களை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

# நாமக்கல் மாவட்டத்தில் ‌சத்துணவு மையங்களில் உள்ள அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான 598 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இம்மாதம் 30 ஆம் தேதி வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

# தமிழ்நாடு, மத்திய பிரசேதம், கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளோரில் 241 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

# மின்சார பேருந்துகளுக்கு உந்துசக்தி அளிக்கும் வகையில், ஃபாம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 பேருந்துகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

# சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத போக்குவரத்து என்ற பிரதமரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மின்சார பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேக்கர்.

 

Translate »
error: Content is protected !!