சோத்துப்பாறை அணை நீர் திறக்கும் ஷட்டர் இயக்கி பார்த்த பொழுது பழுதானதால் அணையில் இருந்து நீர் வெளியேறி வருவதால் 18 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 16 அடி குறைந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை கடந்த 6 தினங்களுக்கு முன்பாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்ட வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பொதுப்பணித்துறையினர் அணையில் உள்ள நீர் திறக்கும் ஷட்டரை இயக்கி பார்த்த பொழுது ஷட்டர் பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அணையில் நீர்திறப்பு அதிகரித்து வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறத் துவங்கியது.
தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அணையின் ஷட்டரை பழுது நீக்கி நீரை அடைக்க முயற்சி செய்தும் தோல்வியடைந்ததால் அணையின் அவசரகால ஷட்டரை இயக்கி அணையிலிருந்து வெளியேறும் நீரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இரவில் மழை பெய்து பணிகள் நிறைவடைந்தது.
மேலும் அணைப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அவசரகால சட்டத்தை இயக்க முடியாத நிலையில் கனரக ஜெனரேட்டர்களை கொண்டுவந்து இரவு இரண்டு மணிக்கு மேல் அவசரகால சட்ட இயக்கி பாதி அளவு நீரை தடுத்து நிலையில் முதன்மைக் கட்டுரை பழுது நீக்கும் பணியில் கடந்த 8 மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அணையில் ஷட்டர் பழுதாகி நின்றதால் 18 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் 16 அடிக்குமேல் குறைந்துள்ளது. அணையிலிருந்து வெளியேறும் நீர் சேறும் சகதியுமாக வெளியேறி வருவதால் பெரியகுளம் நகராட்சி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள வடுகபட்டி, தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட முடியாத நிலையால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.