ஜனவரியில் கட்சி தொடக்கம்! ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

வரும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும்! ஜனவரி மாதம் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் அறிவிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். 

Translate »
error: Content is protected !!