சென்னையில் 6 விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பகல் ஒரு மணிக்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானம், புரெவி புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மாலை 4.50 மணிக்கு வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து பகல் 11.30 மணிக்கு கொச்சி செல்லும் விமானமும், பிற்பகல் 2.35 மணிக்கு கொச்சியிலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று இரவு 8.35 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம், திருச்சியில் இருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன

Translate »
error: Content is protected !!