உரவிலையேற்றத்தைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 1200ரூபாய்க்கு விற்பனையான இப்கோ நிறுவனத்தின் 50கிலோ டிஏபி உரம் ஆயிரத்து 900ரூபாய்க்கும், ஆயிரத்து 160ரூபாய்க்கு விற்பனையான காம்ப்ளக்ஸ் உரம் ஆயிரத்து 775ரூபாய்க்கும், 20-20-013காம்ப்ளக்ஸ் உரம் 950ரூபாயிலிருந்து 1350ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
58சதவீதம் உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பு அறிவித்துவிட்டு, பகுதிநேரம் கூட மின்சாரம் வழங்காததைக் கண்டித்தும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிடகோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டண முழக்கங்களையும் எழுப்பினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக காரின் முன்பு படுத்துக்கொண்டு கண்டண ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம்பேசிய அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறை அதிகாரிகள்… போலீஸ் விலையை நிர்ணயம் செய்யவில்லை, எங்களிடம் வந்து ஒப்பாரி வைக்ககூடாது, இல்லையென்றால் கைதுசெய்துவிடுவோம் என காவல்துறை அதிகாரி கூறினார், அவர் கூறியதை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்..