தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்!

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம் என்ற சிறப்பை, பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ், இந்தியாவில் மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்தது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் கொரொனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இதன் பலனாக தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்குள்ளாகவும், பலி எண்ணிக்கை வெகுவாகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் தொடர் முயற்சிகளால், கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக, பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதோடு, புதியதாக ஒருவருக்கு கூட கொரோனா கண்டறியப்படவில்லை.

கொரோனாவுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!