தமிழக சாமி சிலைகள் இங்கிலாந்தில் மீட்பு

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமி சிலைகள் இங்கிலாந்தில் இருந்து மீட்டு டில்லிக்கு கொண்டு வரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அனந்தமங்களம் கோவிலில் கடந்த  1978ம் ஆண்டு பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளான ராமர், சீதை லட்சுமணன் ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதிலாக 3 போலி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஏற்கனவே நான்கு பேரை தமிழக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிலைகள் அனைத்தும் வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து அனந்தமங்களம் கோவில் சாமி சிலைகள் இங்கிலாத்தில் இருப்பது இருப்பது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்க சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்திய தூதரகத்தின் உதவியுடன், இங்கிலாந்தில் இருந்து மூன்று சிலைகளும் பூஜை செய்யப்பட்டு பாதுகாப்பாக நேற்று டில்லிக்கு கொண்டு வரப்பட்டன. டில்லியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம் அந்த 3 சாமி சிலைகளையும் ஒப்படைத்தார்.
டில்லி வந்தடைந்த சிலைகள் அங்கிருந்து சென்னை அனுப்பப்படுகிறது.
ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து திருடு போன மூன்று சிலைகள் இங்கிலாந்தில் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி அபய்குமார்சிங் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை 10
சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக சிலை கடத்தல் வழக்குகள்
தமிழகத்தில் இல்லை. இன்னும் தமிழகத்தில் உள்ள சிலைகள் நியூயார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளது தெரியவந்துள்ளது. அதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’  இவ்வாறு தெரிவித்தார்.
Translate »
error: Content is protected !!