திமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரமக்குடியில் பரபரப்பு;
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய தொகுதிகளுக்கு திமுக தலைமை நேற்றுமுந்தினம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பு செய்தது. இதில், ராமநாதபுரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் என்ற காதர்பாட்சா போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்த நிகழ்ச்சியில் கட்சிக்காரர் ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நேற்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்வின் போது திமுகவை சேர்ந்த கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் கோஷ்டிக்கும், திமுக இளைஞரணி அமைப்பாளர் கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர் .இந்த தாக்குதலை போலீசார் தலையிட்டு தடுத்து நிறுத்தி திமுக வேட்பாளரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். திமுகவினருக்கு ஏற்பட்ட இந்த அடிதடி தகராறு அந்த வழியே சென்ற பொது மக்கள் சிதறி ஓடினர் இதனால் பார்த்திபன் ஊரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..