தேசத்தை காத்தவரை கவுரவித்த ராணுவ வீரர்கள், பரமக்குடியில் நெகிழ்ச்சியான சம்பவம்…வைரல் வீடியோ

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரருக்கு ராணுவ வீரர்கள் இணைந்து வரவேற்பு கொடுத்த வைபவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி.

கடந்த 2004ம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர் ஹவில்தாராக பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

17 வருடங்கள் ராணுவ பணியை நிறைவு செய்து ஊர் திரும்பியவரை ரயில்வே ஸ்டேசனில் இருந்து வீடு வரை மேளதாளங்கள் முழங்க வரவேற்று கேக் வெட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் பரமக்குடி சேது சீமை பட்டாளம் என்ற ராணுவ வீரர்கள், வீரர்களின் இந்த வரவேற்பு வைபவம் பரமக்குடி நகர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் விழா நடத்தி வீடு வரை அழைத்து வந்து விட்டு பரிசு பொருள் வழங்கி கவுரவிப்பது வழக்கம், ஆனால் ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு இந்த மாதிரி விழா நடத்துவது இல்லை.

அதனை இன்று சேது சீமை பட்டாளம் என்ற ராணுவத்தினர் போக்கியுள்ளனர். சேது சீமை பட்டாளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கூறுகையில் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது, மேலும் ராணுவ வீரர்களிடமே ஓய்வு பெற்ற பின் தகுந்த மரியாதை கிடைப்பதில்லை என்ற மனக்குறை உள்ளது.

அதனை போக்க ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள  ராணுவ வீரர்கள் அடங்கிய குழு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். ரயில் மூலம் பரமக்குடிக்கு வருகை தந்த கருப்பசாமிக்கு மாலை அணிவித்து ரயில் நிலைய வாசலில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை கண்ட அவரது உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பரமக்குடியில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Translate »
error: Content is protected !!