தேனியில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு..

தற்போது இரண்டாவது  கட்டமாக  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை குறித்து தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி  அவர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனத்தையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தேனி மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சார வாகனங்கள் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தது . இதில் தேனி துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் ஆய்வாளர்கள் குமரேசன் ஜெயராணி சார்பு ஆய்வாளர்கள் முனியம்மாள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!