நாளைக்கு தேர்தல்…என்னால் ஓட்டுப் போட முடியாது – நடிகை கஸ்தூரி வருத்தம்

சென்னை,

நாளைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்னால் ஓட்டுப் போட முடியாது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். ஆனால் துணிச்சலாக பேசக்கூடியவர். யாருக்கும் பயந்து கருத்து சொல்லாமல் ஒதுங்கி சென்றதில்லை. தன்மீதான விமர்சனங்கள் எப்படி வந்தாலும் அதையும் தில்லாக எதிர்கொள்பவர். இந்த முறை இவர் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. இதற்கு காரணம், திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து கஸ்தூரி விமர்சனம் செய்து வருவதால்தான்.

அதனால் அவரை பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று சோஷியல் மீடியாவில் ஒருசிலர் விமர்சித்தும் வருகிறார்கள். ஆனாலும் எதைப்பற்றயும் கவலைப்படாத கஸ்தூரி, இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பி டி செல்வகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.. கமலுக்கு எதிராக தன் கருத்தை பலமுறை பதிவு செய்த கஸ்தூரி, கமல் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தது சற்று மலைப்பாக இருந்தது.

அதேசமயம், சாதி மதத்தை கடந்து, அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற செல்வக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்த விஷயமாக பார்க்கப்பட்டது. இவ்வளவும் செய்த கஸ்தூரி, நாளைக்கு ஓட்டு போட முடியாது என்று வருத்தமாக என்று சொல்லி ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் இதுதான். “தவிர்க்க இயலாத சிக்கல்

ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு என்று பதிவிட்டுள்ளார். எப்போதும் போல இல்லாமல், இந்த முறை தேர்தலில்தான் அதிக அளவு பண நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்டது.. அதிக அளவு பணமூட்டைகளை அதிகரிகள் கையும் களவுமாக பிடித்த நிலையில், ஓட்டு போடும் சமயத்திலும் காசு பட்டுவாடா நடக்கும் என்பதை ட்வீட்ட போட்டு அலார்ட் செய்துவிட்டு போயுள்ளார் கஸ்தூரி.. நோட் பண்ணுங்கப்பா…!

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!