நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற தடையாக இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருச்சிநேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்ற தடையாக இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்நெல் கொள்முதல் நிலையத்தை கல்லூரில் அமைத்திட கோரிக்கை

திருச்சி குணசீலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது,ஆனால் குணசீலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை பெற்றுக் கொள்வதில்லை என்றும்,விவசாயிகள் மூட்டையில் நெல்லை கொண்டு சென்றால் அதனை இறக்கி வைக்க கூட பாதுகாப்பான இடம் இல்லை என்று அப்பகுதி விவசாயிகள் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் இனைந்து  கல்லூர் அருகே நெற் கொள்முதல் நிலையம் ஒன்றனை உருவாக்கி அங்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் கல்லூரில் நெற் கொள்முதல் செய்ய அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் தடையாக இருப்பதாக கூறி அப்பகுதி விவசாயிகள் ( 200க்கும் அதிகமானோர் ) திருச்சி தில்லை நகரில் உள்ள வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசிய பரஞ்சோதி பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு கான முடியும் என்றதால் அதிருப்தியோடு திரும்பி சென்றனர்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நெல் பயிர்களை உற்பத்தி செய்து அதனை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் பாதுகாப்பாக அதனைக் கொடுத்துவிட்டு வீடு திரும்ப முடியவில்லை என்று விவசாயிகள்  வேதனையோடு தெரிவித்தனர். அதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் நெல் கொள்முதல் நிலையம் அமைய உதவவில்லை என்றால் கண்டிப்பாக அதிமுகவை விட்டு மாற்றுக் கட்சிக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!