பகிரங்க அழைப்பு… கமலுடன் காங்கிரஸ் இணையுமா…!

சென்னை,

திமுககாங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது. விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டாலும், ‘பாஜக எதிர்ப்புஎன்ற ஒற்றைப் புள்ளியில் வேறு வழியின்றி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

சென்னை: திமுககாங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டாலும், ‘பாஜக எதிர்ப்புஎன்ற ஒற்றைப் புள்ளியில் வேறு வழியின்றி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் அணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், ‘மக்கள் மாறுதலுக்கு தயாராகிவிட்டனர். காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்தால் வந்தால் அவர்களுக்கு நல்லது.

ஆனால், எங்களுடன் வருகிறார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை இப்போது கூறமுடியாதுஎன தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸை தங்கள் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் அழைத்திருந்த நிலையில், திமுக தரப்புடன் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருவதால், மீண்டும் நேரடியாக அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!