பரமக்குடி அருகே காச்சாணி கிராமத்தில் புதிய கலையரங்கம்….எம்எல்ஏ சதன் பிரபாகர் திறப்பு

பரமக்குடி அருகே காச்சாணி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம். எம்எல்ஏ சதன் பிரபாகர் திறந்துவைத்தார்:

பரமக்குடி,

இராமநாதபுரம் மாவட்டம்: பரமக்குடி அடுத்த  நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள .காச்சான்  கிராமத்தில்  எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட நாடகமேடை  எம்எல்ஏ சதன் பிரபாகர் திறந்துவைத்தார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய  கிராமங்களில்  தார் சாலைகள்,போர்வெல்ஸ், நாடகமேடை  அமைக்கும் பணிகள் எம்எல்ஏ நிதியில்  நடைபெற்று வருகிறது.நேற்று, .காச்சான் கிராமத்தில் ரூ.7.லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதி 1.25 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்ட புதிய நாடக மேடைநாடக திறக்கப்பட்டது.

ஒன்றிய செயலாளர்  குப்புசாமி,ஒன்றிய பெருந்தலைவர்  வினிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, முன்னாள்  ஒன்றிய செயலாளர்  நவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் தலைமை ஏற்று நாடக மேடையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அஞ்சாமடை கிராமத்திலிருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக புதிய பேருந்து வழித் தடத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி அரசு போக்குவரத்து கழக டெப்போ மேனேஜர் நளங்கில்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!