நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் தமிழ் திரையுலகில் ‘கடாரம் கொண்டான்’ படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் கமலின் மகள் அக்சராஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 4 அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. அதில் பங்கு பெறும் 4 போட்டியாளர்களில் அபிஹாசனும் பங்கேற்க உள்ளதாக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வலம் வருகின்றன. கமலின் நேரடி சிபாரிசில் அபிஹாசனும், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் இம்முறை போட்டியாளர்களாக களமிறங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை அபிஹாசன் மறுத்துள்ளார். தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தனது சமூகவலைதளப் பக்கம் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.