பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் Dr. கதிர்காமு, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து தாமரை குளத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சினேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்..
இதில் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி ,மேற்கு ஒன்றிய செயலாளர் குள்ளபுரம் கணேசன் நகர செயலாளராக, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்தையா ,ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன் ,நகர இணைச் செயலாளர் வழக்கறிஞர் பிரிவு பாலாஜி மணிகண்டன் ,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குபேந்திரன் ,மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி ,மதுரை செல்வம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமாவதி ,மாவட்ட இணைச்செயலாளர் அறிவுக்கொடி ரத்தினம் சிந்து மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக வேட்பாளர், வெற்றிபெற்றால் பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி டிஜிட்டல் மருத்துவமனையாக மாற்றவும் , விவசாயிகளின் தண்ணீர் பற்றாகுறையை போக்க 18ம் கால்வாயை வராகநதியுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.