மஞ்சளார் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு.. மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்  கோடை மழையால் 51 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோரமுள்ள தேனிதிண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த தொடர்  கோடை மழையின் காரணமாக மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 42 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 50.60 அடியாக இருந்தது.

இதனிடையே மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையின் காரமாக மாலை 4 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மஞ்சளார் அணை உதவி செயர் பொறியாளர் சேகரன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள  கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தல்க்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்தானது 230 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

Translate »
error: Content is protected !!