மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் பாசனத்திற்க்கு மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது. மேலும் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு உத்தரவின்படி மஞ்சளாறு அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெரும் வகையில் 100 கன அடி வீதம் இன்று முதல்107 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் 3386 ஏக்கரும் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1873 ஏக்கர் நிலத்திற்கு 40 கன அடிவீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு நீர் வரத்து 46 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 107 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல்படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். உடன் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து அன்ன பிரகாஷ் பெரியகுளம் சார்பாக மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் நீர் திறப்பின் போது பங்கேற்றன