மார்ச் 13ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு – தமிழ்நாடு கள் இயக்க தலைவர் பேட்டி

தேனி தனியார் விடுதியில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி மார்ச் 13 ல் ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும் என செய்திகளுக்கு பேட்டி,

தேனியில் உள்ள தனியார் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர்களுடன் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் ஒருங்கிணைப்பாளர்-அன்வர் பாலசிங்கம்,  பொதுச்செயலாளர்- பொன்.காட்சிக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி பேசியது.

கள் இறக்குவதும் , பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை இந்த உரிமை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசால் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதை ஈர்க்கும் விதமாக மார்ச் 13 ல் ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும். இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் , ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும். 

2021 வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாக இம்மாநாடு அமையும்.  இதற்கு முன்னோட்டமாக பிப். 27 ல் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். 

அப்போது போலீசார் கள் இறக்குவோர் மீது நடவடிக்கை எடுத்தால் , நாங்கள் கேட்கக்கூடிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டது. மது விலக்கு சட்டமா , இல்லை மதுவிலக்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டது. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமா என கேளவி கேட்போம். இதற்கு அரசு தரப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும். நாங்கள் அரசிடம் கள் இறக்குவதற்கு அனுமதி கேட்க வில்லை. 1950 ஜன 26′ நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டம் , கொடுத்திருக்கும் உரிமைதான் கள் இறக்குவதும் , பருகுவதும். உலக அளவில் 108 நாடுகளில் பனை , தென்னை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டை தவிர எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை.

இந்தாண்டுக்கு முன் பீகாரில் நித்தீஸ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது .  அப்போது சாராயத்திற்கு இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கள் இறக்க, விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டது . கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபோது கள் விற்பனையில் அரசு கைவைக்க வில்லை. 

நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய மதுக்கடைகளை மூட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தவு. அப்போது கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டன.  கள்ளுக்கடைகள் மூடப்படவில்லை . அவர்கள் கள் மதுவோ போதைப்பொருளோ அல்ல. உணவு என்பதுதான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். 

கொரோனாவின் கோரப்பிடியில் முதலில் சிக்கியது கேரளா மாநிலம் , அப்போது ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. மதுக்கடைகள் மூடப்பட்டன . கள்ளுக்கடைகள் திறந்தே வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தடை இருப்பது வேதனை படக்கூடிய ஒன்று , ஒட்டு மொத்த உணவு என்று கூறும்போது தமிழ்நாட்டில் மட்டும் , இது ஒரு போதைப்பொருள் , மது என, உலகலாவிய நடைமுறைக்கு மாறாக அரசு ரூ 10 கோடி பரிசு பெற்றுக்கொள்ளுங்கள். முதல்வர் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். 

ஆட்சியை தக்க வைக்க கள் விடுதலை செய்ய அரசு முன் வர வேண்டும். இயற்கை ஆர்வலர்களும் , விவசாயிகளும், பனை விவசாயிகளும், ஆளும் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் , முதல்வர் தடையை நீக்க வில்லை என்றால் , எதிர்கட்சி தேர்தல் அறிக்கையில் கள்ளுக்கான தடையை நீக்க உறுதியளித்தால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று செய்திகளுக்கு பேட்டியளித்தார்.

 

 

 

Translate »
error: Content is protected !!