முதல்வரை பாஜக மாநில தலைவர் எல் முருகன் இன்று சந்திக்கிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்திக்கிறார்.

சென்னையில் நேற்று நடந்த .தி.மு.. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசும்போது, கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுகதலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்

கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்ற எண்ணத்தோடு இருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும் என்றும் கடுமையாக பேசினார்இந்நிலையில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்தித்து பேசுகிறார்

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவுடன் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

 

Translate »
error: Content is protected !!