முதல்வர் தூத்துக்குடி பயணம்: காவல்துறையினர் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தூத்துக்குடி சுற்றுப்பயணத்தை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடியில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நவ. 11ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். அவரது வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 81 காவல் ஆய்வாளர்கள் உட்பட 2150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், சிவகங்கை மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் முரளிதரன், திண்டுக்கல் தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் இனிகோ திவான் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!