மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் தொற்றுக்கு ஒருவர் பலி

மும்பையில் முதன்முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் ஒருவர் இறந்துள்ளார்.

மும்பையில் 63 வயதான பெண் ஜூலை அன்று டெல்டா பிளஸ் வைரஸால் பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அந்த பெண் வேறு எங்கும் பயணம் செய்யவில்லை.

ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. ஜூலை 21 அன்று, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து ஜூலை 27 அன்று இறந்தார். மும்பை மாநகராட்சி அவரது வைரஸ் மாதிரிகளின் மரபணு வரிசையைப் பெற்றுள்ளது, மேலும் அவரது மரணத்திற்கு டெல்டா பிளஸ் மாறுபாடு வைரஸே காரணம் என்று தெரியவந்தது.

Translate »
error: Content is protected !!