லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனிற்கு அழைப்பதற்கு அழைக்க, இனி பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறை, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, வேறு மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள மட்டுமே பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.