லட்சுமி விலாஸ் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்க, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்க முடியாது.
லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க, மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், டிசம்பர் 16ஆம் தேதி வரை தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும்.
அதேநேரம், மருத்துவ சிகிச்சை, உயர் கல்வி ,திருமணம் போன்றவற்றுக்கான செலவுகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று, லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து கூடுதல் தொகை எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.