தொடர் மழையால் வராகநதி ஆற்றில் நீர்வரத்து துவங்கியது; ஆர்ப்பரித்து செல்லும் மழைநீரை பார்த்து பெரியகுளம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் செல்லும் வராகநதி ஆற்றில், நகரில் குப்பைகலும், சாக்கடை கழிவு நீரும் கலந்து மாசுபட்டு இருந்தது. வராகநதி ஆற்றை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டுமென்று, பெரியகுளம் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத்தின் முயற்சியால், மாசுபட்டு இருந்த வராகநதி ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், நேற்று இரவு முதல் வராகநதி ஆற்றில் நீர்வரத்து துவங்கியது. ஆற்றில் முழுமையாக தூர்வாரப்பட்ட நிலையில், கொஞ்சம் நீர் வந்தாலும் அது ஆற்றில் முழுமையாக தங்கு தடையின்று ஆர்ப்பரித்து செல்கின்றது.
இதை பார்க்கும் பெரியகுளம் பகுதி மக்கள் ஆற்றில் முழுமையாக செல்வதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூர்வாரிய எம்.பி. ரவீந்திரநாத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.