வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி போராட்டத்திற்கு செல்லமுயன்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ரெயில் நிலையத்தில் கைது.
மத்திய பாஜக அரசானது எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றிய 3வேளாண் சட்டங்களானது கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் அழித்தொழிக்கும்வகையில் உள்ளதாகவும்கூறி இதனை திரும்பபெற வலியுறுத்தி இந்தியாமுழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, டெல்லியில் கடும்குளிரில் தொடர்போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விரோத சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ரெயில்மூலம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி செல்லமுயன்றனர். இதனிடையே திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் டெல்லி செல்லமுயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைதுசெய்தனர்.
அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில்… அகில இந்திய கிசான் சங்க ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த தன்னை காவல்துறையினர் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தூண்டுதலால் கைதுசெய்துள்ளது, ஏற்கனவே 300பேருடன் டெல்லிசெல்லமுயன்றபோது தடுத்துநிறுத்தியநிலையில் தற்போதும் தடுத்து கைதுசெய்துள்ளது. கழுத்தறுத்து அல்லது மருந்துகுடித்து சாவதைத் தவிர வேறு வழியில்லை, 3கோரிக்கைகள் நிறைவேற்றாமல் அதனை நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் மோடி மன்கீபாத் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார், இதனை வாபஸ்பெறும்வரை தொடர்;ந்து போராடுவோம் எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.