அதிமுகவால் 60 கோடி ரூபாய் நஷ்டம்…! சேலத்தில் ஆக்ரோசமாக பேசிய கமல்…

சேலம்,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுகவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவ்வப்போது அவர் பிரச்சாரத்தில் வெளிப்படுத்துவது வாடிக்கை. சேலம் மாநகரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக மீதான கோபத்தை ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுகவால் தனக்கு 60 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறி அங்கிருந்தவர்களை அதிரவைத்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் ஆரம்பம் முதலே இருந்தது இல்லை. அதனால் அவரை 1990களில் தொடங்கி ஜெயலலிதா மரணம் அடையும் வரையிலும் யாரும் கமல் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் கமல்ஹாசனின் ஆரம்ப கால செயல்பாடுகள் அப்படித்தான் இருந்தது. விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகமால் தடை ஏற்பட்ட போது கூட நாட்டை விட்டு போவதை தவிர வேறு வழியில்லை எனக்கு என்று உருக்கமாக பேசினார்.

அப்படி பேசிய கமல்ஹாசன், அடுத்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து அரசியலில் களம் இறங்கியதற்கு அதிமுகவின் அன்றைய செயல்பாடுகள் மிக முக்கியமான காரணமாக அப்போது பேசப்பட்டது.

அதிமுக ஆட்சியை எதிர்த்தே அரசியல் செய்த கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். இதனால், அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்பட்ட கொங்கு மண்டலம் உள்பட மொத்த தமிழகத்திலும் திமுக கூட்டணியிடம் அதிமுக படு தோல்வியை சந்தித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து ஆக்ரோசமாக அரசியல் செய்த கமல்ஹாசன், தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். திமுகவை கடுமையாக தாக்கும் கமல்ஹாசன், அதிமுகவையும் மோசமாக விமர்சித்து வருகிறார்.

பாஜகவின் மீது ஷாப்ட் கார்னர் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனை எதிர்த்து நின்று பாஜகவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் மீதான கடும் கோபத்திற்கான காரணத்தை கமல் வெளிப்படுத்தி உள்ளார். அண்மையில் சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது இதில் பேசிய அதன் தலைவர் கமல்ஹாசன், ரொம்பவும் கோபமாக பேசியடிப இருந்தார்.

அப்போது ஒரு கட்டத்தில், ‘‘எனது சொத்து மதிப்பு ரூ.176 கோடின்னு வேட்பு மனுவுல சொல்லியிருக்கேன். அதிமுக ஆட்சியில் கொடுத்த தொல்லையால் மதிப்பு குறைந்துவிட்டது. இல்லை என்றால் ரூ.200 கோடியை தாண்டியிருப்பேன். எனது தொழிலில், அதிகார திமிரில் எனக்கு ரூ.60 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டனர். அவர்களை சும்மா விடமாட்டேன்.

35 வருடமாக வருமான வரி கட்டிகிட்டு வருகிறேன். நான் முறையாக வரி கட்டாமல் இருந்திருந்தால் ரூ. 300 கோடியை தாண்டியிருக்கும், வெளியே சொல்லமுடியாமலும் சொத்து சேர்த்திருப்பேன். நான் அப்படி நடந்து கொள்பவன் கிடையாது. நான் செத்தால் என் உடல் தமிழ் மண்ணுக்குன்னு எழுதி கொடுத்துவிட்டேன். இந்திய நடிகர்களிலேயே முதன்முதலாக உடலை தானமாக கொடுத்தது நான் தான்என்று ஆக்ரோசமான பேசியிருக்கிறார். அங்கிருந்த மநீம கட்சியினர், அதிமுக மீதான ஆண்டவரின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணமா என்று முணுமுணுத்தார்கள்.

Translate »
error: Content is protected !!