அதிமுக ஆட்சியில் ஓடைகளில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. மீண்டும் தரமான கட்டுமானத்தில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் மேற்கு தொடர்சி மழையை ஒட்டி உள்ள விளை நிலங்களில் உள்ள ஓடைகளில் நீர் தாக்கத்திற்கும் மழை வெள்ளத்தின் போது மண்ணரிப்பை தடுக்கும் விதமாக சிறு சிறு ஓடைகள் மற்றும் ஆற்றுப்பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
இதில் வடகரை தொண்டகுத்தி பகுதியில் விவசாயிகள் ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக ஆடியில் கடந்த 4 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கடந்த ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த சில நாடகளாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஓடைகளில் ஏற்பட்ட சிறிதளவு வெள்ளப்பெருக்கால் தரமற்ற முறையில் கட்ட பாட்ட 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு தடுப்பணைகள் இருந்த தடமே இல்லாமல் போனது.
மேலும் மழை பெய்து ஓடைகளில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டால் மண்ணரிப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் சேதம் அடையும் நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதம் அடைந்த தடுப்பணைகளை ஆய்வு செய்து மீண்டும் தரமான முறையில் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.