கடந்த 10ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அதிமுக செய்து வரும் நலத்திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது – போடியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜி.கே.வாசன் பேச்சு.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். போடி தேவர் சாலையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்துடன் இனைந்து பரப்புரை செய்த ஜி.கே.வாசன் பேசுகையில்,
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் கிடைத்ததில் முன்னிலை வகிப்பது தமிழகத்தில் போடி தொகுதி மட்டுமே. கடந்த 10ஆண்டுகளாக போடி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கக் கூடிய ஓ.பி.எஸ் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போடி தொகுதியை பிரபலமான பகுதியாக மாற்றியுள்ளார்;.
போடி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்குமான திட்டங்களை செயல்படுத்தியவர் ஓ.பி.எஸ். மேலும் கிராமப்புற அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் மருத்துவம் படிக்கலாம் என்ற கணவை நணவாக்கியவர்கள் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ். மேலும் பிரதமர் மோடியின் அரசால் இந்தியா ஒரு புறமும் வளர்ச்சியும் பாதுகாப்பும் அடைந்துள்ளது.
போடி தொகுதியின் வளர்ச்சி தமிழகத்தின் வளர்ச்சியாகும். முதல்வர் , துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய தலைவராக தொண்டராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் 10ஆண்டுகளாக உள்ள தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் திமுகவை தகர்த்தெறிய வேண்டும்.
மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்தார்கள் என்றால் அவர்களைப் பற்றி அடுக்கடுக்காக பொய்களை கூறி மக்களை ஏமாற்ற நினைக்கும் கூட்டணியாக இன்று சந்தர்ப்பவாத கூட்டணியாக திமுக உள்ளது. அதனை மக்கள் முறியடித்து தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
கோரோனோ காலத்தில் வழங்கபட்ட 1000 ரூபாய் பொங்கல் பரிசாக 2500 உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியதை எதிர்த்தவர்கள் திமுக. அதுபோல மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டங்கள் மக்களுக்கு சேரக்கூடாது என்பதற்காக அதனை எதிர்ப்பது திமுக. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சட்டமன்றத்திற்கே செல்லாத கட்சி திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பிற்கு பெயர் போன திமுக சட்டமன்றத்திலிருந்து மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுகவைப்பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. அனைத்து துறைகளிலும் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகின்றது. மேலும் பாராளுமன்றத்தில் தமிழகத்தில் உள்ள 38 உறுப்பினர்களின் சவால்களுக்கு எல்லாம் ஒற்றை ஆளாக சவால் விட்டு வருபவர் தேனி – எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத் என்று பேசினார்.