பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானர்; இரண்டு இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நேருநகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண்டனி (18), ரங்கசாமி(19) மற்றும் அறிவழகன்(18) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தேனியில் இருந்து திருப்பூரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது தேவதானப்பட்டி அருகே உள்ள தர்மலிங்கபுரம் பகுதியில், அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆண்டனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ரங்கசாமி மற்றும் அறிவழகன் ஆகியோர் படுகாயமடைந்து, படுகாயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான, தாடிச்சேரி சேர்ந்த மணிகண்டன் (47) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.