அரசு பேருந்து மோதிய விபத்தில்,. விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தினை ஜப்தி செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சேக் இப்ராகிம்(48). இவர் கொடைக்கானலில் டுரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வந்துள்ளார். இநந்லையில் கடந்த 2018ம் ஆண்டு பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சேக் இப்ராகிம் மீது அரசு பேருந்து மோதியதில் சேக் இப்ராகிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த சேக் இப்ராகிம் குடும்பத்தினர் பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி திலகவதி விபத்தில் இறந்த சேக் இப்ராஹிம் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரு 5 லட்சத்து 72 ஆயிரத்து 634 வாங்க கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதுவரை விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அமீனா ரமேஷ் தலைமையில் வக்கீல் ராஜா முகமது அகியோர் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்திலிருந்த பயணிகளை மாற்று பேருந்தில் கண்டக்டர் அனுப்பி வைத்தார்.