அரசு மருத்துவமனையில் முதியவர் தற்கொலை…

திருச்சி அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்; கொரோனா பாதிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடக்கிறது.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலை உள்ளது. சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, தடுப்பு கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். எனினும், அவர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

தற்கொலை செய்து கொண்டவரின் சட்டை பாக்கெட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!