ஆதித்தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் காலஞ்சென்ற கண்ணனின் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி, தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி பெரியார் மய்யம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆதித்தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வேலன் தலைமை வகித்தார். இதில் ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் கலந்து கொண்டார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர்கள் எம். அந்தோணிச்சாமி , எம்.எச். அல்லாபிச்சை, மாவட்ட துணை செயலாளர் கே.ஏ. சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர், மற்றும் ஜனநாயக அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.