இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரம் 385 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 10 லட்சத்து 55 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4,12,153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 617 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 27 ஆயிரம் 371 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 50 கோடி 10 லட்சத்து 09 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.