இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 22 ஆயிரம் 258 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 15 லட்சத்து 25 ஆயிரத்து 080 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,64,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 530 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 33 ஆயிரம் 049 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 56,64,88,433 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!