இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 62 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் சரிவடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 86,498 ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 62 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,498 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,89,96,473பேர். கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் 86,498பேர். இதுவரை குணமடைந்தோர்: 2,73,41,462 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,82,282 பேர். கொரோனா உயிரிழப்புகள்: 3,51,309 பேர்.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2123 பேர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 13,03,702 பேர்
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,61,98,726.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 36,82,07,596பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,73,485 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.