இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்….அப்பகுதியில் பெரும் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

இராமநாதபுரம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000 தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை,

வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பாக சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர் ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை  என கூறியதை தொடர்ந்து  காவல்துறையினரிடம்  வாக்குவாதம் செய்து தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்3 மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Translate »
error: Content is protected !!