இறுதியில் வென்றது சமூகநீதி! ஆளுநருக்கு ஸ்டாலின் நன்றி

உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 45 நாட்களுக்கு பிறகு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் வழங்கியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

தி.மு.க. நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூகநீதி! என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!