உசிலம்பட்டி ஆண்டிபட்டி இடையே அகல ரயில் பாதை முதல் கட்ட சோதனை ஓட்டம்

மதுரை&போடி அகலரயில்பாதை திட்டத்தில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரம் அகலப்பாதை பணிகள் முடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

உசிலம்பட்டியில் இருந்து 4.40 மணிக்கு கிளம்பிய ரெயில் ஆண்டிப்பட்டி கணவாய் வரையிலான 11 கிலோமீட்டர் தூரம் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கணவாய் மலைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டது.  11 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ரெயிலை காண ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சரியாக 5 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கு வந்த ரெயிலை ரவீந்திரநாத் எம்.பி மலர் தூவி வரவேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

 கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் ரெயில்வே பணிகள் நடைபெற்றது. நான் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது  தேனி மாவட்டத்திற்கு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நான் வெற்றி பெற்றதும் பிரதமர் மற்றம் ரெயில்வே துறை அமைச்சரை அணுகி விடுத்தேன். அதன்படி போடி&மதுரை அகலரெயில்பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது ஆண்டிப்பட்டி வரையிலான 58 கிலோமீட்டர் தூரம் பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது-. விரைவில் போடி வரையில் பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு போடி&மதுரை வழித்தடத்தில் பயணிகள் ரெயில் சேவை இயக்கப்படும். மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ரெயில் சேவை தொடங்குவது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரவீந்திரநாத் எம்.பி பேசினார். பேட்டியின் போது .தி.மு-. மாவட்ட செயலாளர் சையதுகான், ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் உள்பட .தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!