உடுமலையில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசிகள் வந்தும் பொதுமக்கள் ஏமாற்றம்..! ஏன்.?

கோவை,

உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தடுப்பூசிகள் தீர்ந்து போனது. தடுப்பூசிகள் எப்போது வரும் என தெரியாமல் சுகாதார ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், இன்று 203 பேருக்கு செலுத்தக்கூடிய கோவிட்சில்டு தடுப்பூசி மட்டுமே வந்தது. அதுவும் ஒரு சில மணி நேரங்களில் இரண்டாம் கட்ட ஊசி செலுத்தும் நபர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது புதிதாக வந்த ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடிந்தது. அதற்குள் தடுப்பூசி அனைத்தும் தீர்ந்து போனது. இதனால் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Translate »
error: Content is protected !!