உலக மகளிர் தினத்தையொட்டி, மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: ராமநாதபுரம் அரண்மனை முன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைப்பு.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும், வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக, மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்:
இதல் 600க்கும் மேற்பட்ட மகளிர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு 100 சதவீதம். வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மத்திய கொடிக்கம்பம், சாலைத்தெரு, ரோமன் சர்ச் வழியாக சென்று சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
இதனைத்தொடர்ந்து, அங்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். காவல் கண்காணிப்பாளர். கார்த்திக் IPS உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.