ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்… ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கிய காவல்துறை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நோய்த்தொற்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியில் உள்ள புறவழிச் சாலை அருகே 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முக கவசம் அணியாமல் கிரிக்கெட் போட்டி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது பொது முடக்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வந்ததோடு மட்டுமல்லாமல் குழுவாக இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தி வந்துள்ளனர்.

இதனைக் கண்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரையும் அப்பகுதியிலேயே ஒரு மணி நேரம் தனது வலது கையை நீட்டி நோய்த்தொற்றின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருப்பேன் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் எனக் கூறச் சொல்லி உறுதிமொழி எடுக்க வைத்து நூதனமனா முறையில் தண்டனை விதித்துள்ளார்மேலும் ஒரு மணிநேர தண்டனைக்கு பின்பு கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு அறிவுரை கூறி பொதுமுடக்க ஊரடங்கு விதி முறைகளை கடைபிடித்து வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

Translate »
error: Content is protected !!