கொரோனா நோய்த்தொற்று பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாய்க்காலில் மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம் பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் தாமரைக்குளம் கண்மாய் பாபியம்பட்டி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் நீர் நிறைந்த நிலையில் கண்மாய்களில் இருந்து வெளியேறும் நீரில் மீன்கள் வெளியேறி வாய்க்காலில் செல்வதால்,
பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மற்றும் காலேஜ் விளக்குப் பகுதிகளில் உள்ள வாய்க்காலில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே வாய்க்காலில் இறங்கி மீன்களை கம்பியால் அடித்து பிடித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாய்க்கால்களில் மீன்பிடிப்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாய்க்காலில் மீன்பிடித்தவர்களை அப்புறப்படுத்தினர். இதில் காவல்துறை அறிவுறுத்தியும் தொடர்ந்து வாய்க்காலில் மீன் பிடித்த நான்கு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.