ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 5 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்கம்.

இன்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வழக்கம் போல் வந்தனர். அப்போது அப்போது, அங்கு திடீரென துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் 5 பேர் நுழைந்துள்ளனர். துப்பாக்கி முனையில் மேலாளர் சீனிவாச ராகவ், மாருதி, பிரசாத் உள்ளிட்ட அங்கு வேலை செய்தவர்களை மிரட்டி அவர்களை கட்டி வைத்து ரூ.7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்த அலுவலத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!