தேசிய கங்கை சுத்தப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் வாபாக் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
ஒப்பந்த மதிப்பு ரூ. 1,187 கோடியாகும். இதற்கா பிகார் நகரர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துடன் (பியுஐடிசிஓ) நிறுவனத்துடன் வாபாக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 453 கி.மீ. தூரத்துக்கு (திகா–கன்கர்பாக்) கழிவுநீர் சுத்திகரிப்பு பணியையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும். இதன்படி நாளொன்று்ககு 150 கோடி லிட்டர் தண்ணீரை இந்நிறுவனம் சுத்தப்படுத்தும்.
கழிவுநீர் சுக்தப்படுத்தும் ஆலையை (ஹாம்) இந்நிறுவனம் 24 மாதங்களில் அமைத்து செயல்படுத்தும். அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இந்நிறுவனமே பராமரித்து செயல்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து மரபுசாரா எரிசக்தியாக பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும். இந்த எரிசக்தி குறைந்த விலையில் ஆலைகளை செயல்படுத்த உதவும். இதற்கான திட்டப் பணிகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் அதை செயல்படுத்தல் (டிபிஓ) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இத்திட்டப் பணிக்கான தொகை ரூ. 940 கோடியாகும். இதில் ஆண்டுக்கு செலவாகும் தொகை ரூ. 247 கோடியாகும்.
இந்தத் திட்டப் பணி முழுவதையும் தேசிய கங்கை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதில் 40 சதவீதம் என்எம்சிஜி மானியம் மூலம் கிடைக்கும். எஞ்சிய 60 சதவீதம் தொகை கடன் மற்றும் சம பங்கு மூலம் திரட்டப்பட்டு நிறைவேற்றப்படும். இத்திட்டப் பணிக்கு தேவையான மூலதனத்தைத் திரட்ட வாபாக் நிறுவனம் பிடிசி இந்தியா நிதிசேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது